தினந்தின முறவினைத் தேர்ந்துமே போற்றுவோம் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் 4)
தினந்தின முறவினைத் தேர்ந்துமே போற்றுவோம்;
பனிச்சுடர் போலவே பரிவுடன் வாழ்த்துவோம்!
மனத்துயர் நீக்கிட மகிழ்வுட னுதவுவோம்;
மனத்திட னளித்தவர் மகிழ்வினை யூக்குவோம்!
- வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!