பூவே புலியாக வேட்டையாடு
பூவே புலியாக வேட்டையாடு
××××××××××××××××××××××××××
தாலி கட்டித்
தாய்மார்களை ஆண்மை
காலிக் கூடமாக்கி
கலையிழக்க ரசிப்பதா ?
வேலியிட்ட ஆடாக
வெம்பும் இல்லத்தரசி
கூலியில்லா பூனைப்படையோ
குடும்பத்தைக் காத்திடவே
வயிற்றுப் பசிக்கு
வேலைக்கு வருபவளை
வக்கிர துரியோதர்கள்
வசீகரிக்க முயல்வேதேனோ
விட்டில் பூச்சியாக
வீழாதே பெண்மையே
காட்டின் புலியாய்
காமூகனை வேட்டையாடு
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்