வரப்பிலே வருகையிலே வளையோசை மயக்குதடி
வரப்பிலே வருகையிலே
வளையோசை மயக்குதடி
×××××××××××××××××××××××
வரப்பிலே வருகையிலே
வளையோசை மயக்குதடி
மாராப்புச் சேலையோடு
மச்சானைத் தையேன்டி
காராம்பசுப் பாலாக
காளையன் மனசுடி
சாரப்பாம்பாகச் சீராது
சம்சாரம் ஆவேன்டி
ஆவணி பிறந்தாச்சு
தாவணி புறந்தள்ளு
பவானி அருளோடு
தெய்வானையாக வாயேன்டி
வரப்போரம் புல்லாக
விராப்பாக மறுக்காதே
தரப்போரேன் தாலியொன்று
தங்கத்திலே வேலியாக
விளைஞ்சக் கதிராட்டம்
வளைந்தேப் பணிந்த்தான்
நாளைய இல்லறமும்
நல்லறமாக இனிக்குமடி
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்