தொடங்கிவிடு

தொடங்கிவிடு.
03 / 11 / 23

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடு
கள்ளத்தனம் இல்லாமல் கவலையின்றி வாழ்ந்துவிடு
பள்ளங்கள் மேடுகள் துணிவோடு கடந்துவிடு
முள்பதிந்த பாதைகளை முன்னேற செப்பனிடு
காரணங்கள் சொல்லாமல் காரியத்தில் உறுதிபடு
தோரணங்கள் கண்டுநீயும் மயங்காமல் மாறிவிடு
வானரமாய் சதிராடும் மனம்தனை அடக்கிவிடு
ஆலோசனைகள் சொல்லாமல் ஆக்கமதை தொடங்கிவிடு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (3-Nov-23, 6:12 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 76

மேலே