நினைவுகளின் நெடுஞ்சாலை
நினைவுகளின் நெடுஞ்சாலை
××××××××××××××××××××××××××××××
காதலால் கண்டு கொண்டேன்
உன் வருகையின் ஆரூடம்
உன் நினைவால் இன்று
காத்திருக்கிறேன் நெடுஞ்சாலை ஒரத்தின்
தனி மரமாக நின்றிருந்து
நாளை உன் வருகையால்
நல்லதோர் தோப்பாக மாறுவதற்கு
தாகத்தோடு கொக்காக காத்திருந்தேன்
வானமும் பூமியும் காதலில்
இணைந்து புன்னகைத்து மலரும்
இனிமையான காலையில் சந்திப்போமென
விடியும் வரை காத்திருந்தேன்
நினைவாக காத்திருந்து நெடுஞ்சாலை
மைல் கல்லாக உறைந்து
மெய் மறந்து நிற்கிறேன்
இதயச் சிறைக்கு கைதியாக
நீ வருவாய் என....