காதல் இதயம்

காதலில் மறுகித் தவிக்கும்
குருதிக் குட்டையான இதயம்
துடிக்க மறுத்து அடங்க
தவிக்கிறது தன்னி யல்பாய்.....

அன்று நின்னை தாங்கிக்
காத்திருந்த காதல் இதயம்,
தாங்கிக் காத் திருக்கிறது
நின்நினைவு களைமட்டும் இன்று.....

அன்று நின்னை நோக்கி
காத்திருந்தேன் காதல் ததும்ப,
இறுதியை நோக்கி காத்து
இருகின்றேன் நின்னைசேர இன்று....

உருவாய் நிழ லாடுகிறாய்
கண்முன், கனவா நினைவா
அறியாமல் தடு மாறுகிறேன்
ஆருயிர் அன்பே ஆனந்தமாய்....

நடமாடும் ஆற்றல் நாளும்
பெருகும், உருவாய் உனைக்
காணு கையில் கண்முன்
காந்தமாய் கவரும் நின்நினைவு.....

நின் நினைவோடு விழித்து
நினை வுடனே வாழ்ந்து
விடையும் பெர விழைகிறேன்
வழி செய்வாயா அன்பனே.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:05 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kaadhal ithayam
பார்வை : 811

மேலே