பொய்யிதான்
பொய்யிதான்....!
27 / 11 / 2023
பொய்யிதான் நம்மள புடிச்சி ஆளுது
-பொய்யிதான்
நாம பேசுறது அத்தனையும்
ஆள மயக்கும் பொய்யித்தான்
-பொய்யிதான்
ஆளும் பொய்யிதான் - பார்க்கும்
பார்வை பொய்யிதான்
வார்த்த பொய்யிதான் - கொடுத்த
வாக்கும் பொய்யிதான்
அட மேடையேறி பேசுறபோது
சொல்வதெல்லாம் பொய்யிதான்
அசத்தும் பொய்யிதான்
. - பொய்யிதான்
மொதமொதலா அப்பன ஏச்சி
சொன்னது ஒரு பொய்யிதான்
ஆசான பாத்து பயந்து
சொன்னது மறு பொய்யிதான்
சத்தியமா குடிக்கலேன்னு
சொன்னதும் பொய்யிதான்
ராமனனின் தம்பியின்னு
ஏய்க்கிறதும் பொய்யிதான்
அடுத்தடுத்து சொல்வதெல்லாம்
அடுக்கடுக்கா பொய்யித்தான்
கைவிட மாட்டேன்னு
நடிக்கிறதும் பொய்யிதான்
அழகீன்னு காதலிய ......ஏஏஏஏஏ
அழகீன்னு காதலிய
சொன்னதும் வெறும் பொய்யிதான்
கவிதையாய் எழுதிஎழுதி
வச்சதெல்லாம் பொய்யிதான்.
கண்ணமூடி கனவுலகில்..
கண்ணமூடி கனவுலகில்..
வாழுற வாழ்க்க பொய்யிதான்
வருத்தமான பொய்யிதான்
-பொய்யிதான்
கண்ணால காண்பதெல்லாம்
கருப்பான பொய்யிதான்
காதால கேட்பதெல்லாம்
கடைஞ்செடுத்த பொய்யிதான்
அரிச்சந்திரனின் தம்பியின்னு
அரற்றுவதும் பொய்யிதான்
திருநீறும் நாமம் போடும்
நம்ம வேஷம் பொய்யிதான்
ஊரெங்கும் தேடினேன்
இல்லை ஒரு மெய்யிதான்
அதிர்ஷ்டம் இல்லையின்னு
அலட்டுவதும் பொய்யிதான்
சினிமால காட்டுறது.....உஉஉஉ
சினிமால காட்டுறது
உண்மை கலந்த பொய்யிதான்
சீரியல்ல நடிக்கிறதும்
சேத்து வச்ச பொய்யிதான்
அதநம்பி நாம...
அதநம்பி நாம...
ஏமாறுவது வேதனையான மெய்தான்
கசப்பு மெய்தான்
-பொய்யிதான்
[ "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...."
பாடல் மெட்டில் எனது வார்த்தைகள் ]