பிரியாதே அத்தை மகளே

பிரியாதே அத்த மகளே -
———

பிரியாதே அத்த
மகளே /
பிரியம் வச்சேன்
உம்மேலே /

அறியாத வயசிலியே
ஆசை /
மறவாதே மாமனிடம்
பேச /

சொத்து பத்து
வேண்டா /
சொந்தம் மட்டும்
போதும் /

பூமியத்தான் விலகாத
நிலவா /
நாமினிமே ஒன்றானோம்
தெளிவா /

ஆண்டவனே சேர்த்தானே
நம்மை /
ஆண்டிடலாம் நாட்டையுமே
தெம்பா /

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (25-Jan-24, 11:02 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 45

மேலே