கவிதை
இந்த நூற்றுக்கணக்கான
க விதையை
நான் காகிதங்களில்
நட்டேன்
உணர்வுகளே
அதற்கான
நீர்
படரும் பார்வைகள்
சூரிய ஒளி
மொழிகளை ஒளிச்சேர்க்கை செய்தே
அது நாளும் வளரும்
அர்த்தபுரிந்தோரின்
இமைகள் அதன் இலைகள்
உச்சரிக்கும் உதடுகள் வேர்கள்
புன்னகை மலர்கள்
கண்ணீர் மழை
விரல்களே அதன் கிளைகள்
இதயம் நிழலாக மாறுகையில்
அன்பு தான் அதன் நிலம்