தமிழைப் புகழ்ந்து
அண்ணே நீங்க எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கல. புறநானூறு, சிலப்பதிகாரம், திருக்குறள் ஒளவையார் எழுதியிலிருந்து சில வரிகளை மனப்பாடம் செய்து வச்சிருக்கிறீங்க. நீங்க பேசற பொதுக்கூட்டம், நிருபர் கூட்டத்தில் எல்லாம் நம்ம தமிழ் இலக்கிய வரிகளை பொருத்தமாய் சொல்லுறீங்க. இதையெல்லாம் கேட்கிற பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உங்களைத் தமிழ் அறிஞர்னு பாராட்டற அளவுக்கு இருக்கறாங்க. எதுக்கு அண்ணே இப்படி பேசறீங்க?
@@@@@@@@
நம்ம தமிழ் மக்கள் 'தமிழ் வாழ்க'னு சொன்னாலே போதும். அதைக் கேட்டு மயங்கிடுவாங்க. நான் அரசியலுக்கு வந்ததுக்கு காரணம் சேவை கொஞ்சம். நம்ம குடும்பமும் சொந்த பந்தம் நண்பர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி கொடிகட்டிப் பறக்கணும். அதுக்கு தமிழ்த்தான்டா தம்பி துருப்புச் சீட்டு.
@@@@@@@
அண்ணே நீங்க பெரிய சாணக்கியர் அண்ணே.
@@@@@@@@
இதுதான்டா இன்றைய அரசியல்.