அதிர்ந்தது ஆடம்பர உலகம்

ஐயோ, அம்மா ;

ஐயோ, அம்மா ;

ஐயோ, அம்மா ;

இப்படியாக ஒரு குரல் வந்து கொண்டே இருந்தது.

இந்த குரல் தான் அந்த அடுக்குமாடி குடி இருப்பில் இருக்கும் 20 குடும்பங்களையும் வீதிக்கு கொண்டு வந்து விட்டது.

அப்படி என்ன என்று தெரிய புகார் கொடுக்கப்பட்டு காவல் துறையும் வந்தது.

அடுக்கு மாடியின் 5வது தளத்தில் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு உள்ள சென்றனர் காவலர்கள்.


குற்றப்பிரிவு அலுவலர்கள் தடயங்களை ஆராய்ந்தனர்.

எந்த உயிரும் உயிரோடு போராடுவதாக தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன.

குரல் வந்த அலமாரி பக்கம் நகர்ந்தது காவல்துறை. அங்கே துணிமணிகளை கலைத்து பார்க்கும் போது ஒரு Robot தன்னிச்சையாக குரல் எழுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் ஆராய்ந்ததில் , வந்த இரு திருடர்களும் நன்றாக Coat , Suit அணிந்து எந்த சலனமும் இல்லாமல் Lift ஐ பயன் படுத்தி வெளியேறியதும் தெரியவந்தது.

நடந்தது 3.45 PMபிற்பகல் ;

சத்தம் கேட்க ஆரம்பித்தது 4.00 PM;


திருடர்கள் வெளியேறிய நிமிடம் 4.15 PM

போலிஸ் விவரம் கொடுக்கப் பட்டு வந்த நேரம் 4.25 PM ;

ஆக பட்டப் பகலில் 30 நிமிடங்கள் திருடர்கள் வீட்டில் இருந்ததும் பிறகு நகையோ , பணமோ கிடைக்காத பட்சத்தில் வீட்டை விரயப்படுத்தி விரத்தியில் சென்றதும் web - Camera வில் பதிவாகி இருந்தது.


இது AI உலகம்.

எழுதியவர் : செல்வன் ராஜன் (23-Feb-24, 9:29 am)
பார்வை : 94

மேலே