அவ்வளவே தான் சார்

மாதம் தொடங்கியதும்
செலவை வரவுடன் பட்டியல்லிட்டபடி
தனக்கு என்னதான் மிச்சம் ஆகுமோ என பெருமூச்சு விட்டு ஜன்னல் வெளியே காற்று வாங்கும் பேருந்து பயணி நான் !
அன்று...
என் அருகில் தலை குனிந்து அமர்ந்திருந்த ஒரு சம பயணி
அம்மாவுக்கு...
மாத தவணை...
இத்தியாதி ...
இத்தியாதி ...
என் கடந்து கணக்கிட்டு கொண்டிருந்தார்
இறுதியில் தனக்கென மிச்சம் ?? என எண்ணி தலை நிமிர்ந்தார்...
அவ்வளவே தான் சார்.... வாழ்க்கை என்றேன்!! புன்னகைத்த படி!!
அவரும் பதில் அளித்தார் ஒரு புன்னகையில்!
கடந்து சென்றோம் இந்த பயணத்தையும் வாழ்க்கையையும்!!
குறிப்பு : இவ்வாறான பயணங்களுக்கு பாலின பேதம் கிடையாது!
- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (11-Mar-24, 8:28 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
Tanglish : avvalave thaan saar
பார்வை : 226

சிறந்த கவிதைகள்

மேலே