காதலா காமமா

காதலா காமமா?
புத்தக வாசிப்பின்
மீது கொண்ட
காதல்
பக்கம் பிரித்து வாசிக்க
முனையும் போது

அருகில் இருக்கும்
கைபேசியின் மீது
கண் பட்டு

காதலையும் மீறி
கைபேசியில் கை வைத்து
பொழுது ஓடியபின்
உள்ளம் விழித்து
திரும்பி பார்க்க

காதல் கைவிடப்பட்டு
அம்போவென ஏங்கி
கிடக்கிறது

பக்கம் திறந்த நிலையில்
புத்தகம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Mar-24, 3:02 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 94

மேலே