விக்கிசித்து

வழிப்போக்கர்:

ஐயா, உங்க வீட்டோரமா தெருவில்


போனபோது 'விக்கிசித்து, விக்கிசித்து' ஒரு

பாட்டியோட குரல் கேட்டுதுங்க. நான் பல

நாள் இந்த 'விக்கிசித்து'வை

கேட்டிருக்கிறேன். 'விக்கிசித்து'ன்னா

என்னங்க ஐயா. அது என்னன்னு

தெரியாம என் தலையே

வெடிச்சிரும்போல இருக்குதுங்க. அது

என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா.
@@@###

தம்பி, எனக்கு இரண்டு பையன்கள்.

ஒருத்தன் பேரு விக்கிரமன். இன்னொரு

பையன் பேரு 'சித்தையன்'. மூத்தவனைச்

சுருக்கமா 'விக்கி'னு கூப்புடுவோம்.

இளையவனை 'சித்து'னு கூப்புடுவோம்.

இரண்டு பேரையும் தனித்தனியா கூப்பிட

'விக்கி, சித்து'.

இரண்டு பேரையும் சேர்த்துக் கூப்பிட

'விக்கிசித்து'னு கூப்பிட்டாப் போதும்

விக்கியும் சித்துவும் ஓடி வருவாங்க.

@@@####@

ஓ.... அப்பிடீங்களா. பையன்களுக்குப்

பொருத்துமா பேரு வச்சிருக்கிறீங்க.

எழுதியவர் : மலர் (18-Mar-24, 3:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

மேலே