கோப்பை நிறைய குப்பை
எனது கோப்பையை
காலியாகவே வைத்திருக்கிறேன்;
நிர்ப்பந்தங்களை
நான் நெருங்கவிடுவதில்லை..
திரவங்களின் உபத்திரவங்களின்றி
திடமாய் இருப்பதால் - என்
திமிருக்கு நிகராய் அதற்கும்
நிமிர்ந்த தலை!
என்னைத் தாங்குவதாய்
திசைக்கொரு பந்தம்
சோப்பை எனக்குப் போட்டு
கோப்பையை வசப்படுத்துகிறது. .
அவர்களின்
இளைப்பாறுதலுக்கும்
களைப்பாறுதலுக்கும்.
இணக்கமாகயிருப்பதால்...
இரவல் கோப்பையின்
இடுப்பளவு தொட்டும்
நிரப்புவதை அவர்கள்
நிறுத்துவதாகயில்லை.
வந்த வேலை முடித்து
அவர்கள் சென்றதும்
நிரம்பிய குப்பை
நீதி கேட்கிறது -
எதைக்கொண்டு என்னை
சுத்தமாக்கப் போற நீ?