சுற்றுச்சுவர்

அண்டைவீட்டாரிடம்
அதுநாள் வரை இருந்த
அன்னியோன்னியத்திற்கு
அம்மோனியம் நைட்ரேட் ஆகக்கூடும்
திடீரென்று எழுகின்ற
ஒரு சுற்றுச்சுவர்!

மிகவும் அற்பமான
ஒரு காரணத்திற்கும்
ஆறடி உயரத்திற்கு
இலட்சங்களை தீனியாக்கும்
திமிர்த்தனத்தில் நிமிர்ந்திருக்கிறது
மனிதச் சுவர்கள்!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (28-Mar-24, 9:49 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 33

மேலே