ஆண்டுகள் பத்து

சேர்ந்து வாழ்ந்து
பத்தாண்டுகள்
இன்றோடு......சேராமல்
சேதாரமாய்
நின்று
உயிரை கொல்லும்
நினைவுகள்
இன்னும்
பல்லாண்டு
போனாலும்
மறவாது.......!!

மரணிக்கும்
கணத்தில்
பிரசவிக்கும்
சிசு போல.......மகிழ்ச்சி
ஒரு
பக்கம்...... துக்கம் மறு
பக்கம்
என்று
ஓடி மறைந்து
போன
கோடி
நினைவுகள்
கூடி..... என்னை
கொல்கிறது .......!!

சொல்லாத
துன்பங்கள்
தொடர்கதையாய்
என்
நினைவேட்டில்.......சொல்லித்
தீருமா
சொல்ல
வந்த
வேதனைகள்......!!

என்
வேதனைகளை
புரிந்தவள்
பிரிந்ததன்
விளைவு...... இப்படியான
பதிவு .....!!!

எழுதியவர் : தம்பு (28-Mar-24, 3:45 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : aandukal paththu
பார்வை : 46

மேலே