நாய்க்கு ஒரு நன்றி மடல்

🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶


*நாய்க்கு ஒரு*
*நன்றி மடல்...*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶

மனித இனத்தின்
முதல் தோழன்.....

மனிதனுக்கு உதவி
செய்த முதல் நபர்....

இதனிடம்
அன்னையின்
அன்பு கூட
தோற்றுப் போகும்..... !

தந்தையின்
பாசம் கூட
பணிந்து போகும்......!

நாய் வீட்டைக் காக்கும் என்று
சொல்வார்கள்
வீட்டை மட்டுமல்ல
நாட்டைக் காப்பதிலும்
இதற்கு பெரும் பங்கு உண்டு.....!

இதன் அகராதியில் இல்லாத
ஒரு சொல் "மறதி.... !"

லஞ்சம் வாங்காமல்
காக்கிச்சட்டைப் போடாமல்
"ஒரு நேர்மையான காவலர்...!"

"சட்டத்தின்
ஓட்டை" வழியாக
தப்பித்தவர்கள் இருக்கலாம்...
இதன்
"மூக்கு ஓட்டை" வழியாக
தப்பித்தவர்கள் இல்லை......

ஆத்திரத்தில்
ஒரு வார்த்தை திட்டினாலும்
போய்விடுவது மனித நட்பு....
அடித்தே ! விரட்டினாலும்
போகாதது தான் பைரவ நட்பு....

"ஆறாவது" அறிவிக்கு
வெடிகுண்டு
வைத்து தான் தெரியும்...
"ஐந்தாவது"அறிவுக்கு தான்
வெடிகுண்டை
எடுக்கத் தெரியும்....

வளர்த்தவர்களுக்கு
மட்டும் தான்
இது "வாலாட்டும்"
வேறு யாரும்
இதனிடம்
"வாலாட்ட" முடியாது.....

காவல் காப்பதில்
திண்டுக்கல் பூட்டுக்கூட
இதற்கு
சலாம் போடும்...

குழந்தைகளோடு
விளையாடும்
"உயிர்வுள்ள பொம்மை....!"

மாற்றுத்திறனாளிகளுக்கு
இது ஒரு
"செயற்தை உறுப்பு....!"

ரேஷன் அட்டையில்
எழுதப்படாத
"குடும்ப உறுப்பினர்......!"

"நன்றி கெட்ட
நாயே !" என்று
மனிதர்களைத் திட்டுகிறோம்...
நாய் என்று
நன்றி கெட்டிருக்கிறது ?

சந்தேகம் வந்தால்
தயங்கள் பயப்படாமல்
எந்த இடத்திலும்
எந்த நேரத்திலும் குரல் எழுப்பும்....

மனிதனோடு சேர்ந்தாலும்
"சுயநலத்தோடு" வாழவில்லை...
சுயத்தை
இழக்கவிலலை.........

"சிலரை
அநாதை நாயே! "என்று
ஏளனம் செய்கின்றார்கள்
அவர்களுக்குத் தெரிவதில்லை....
அநாதையாக
இருப்பவர்களுக்குக் கூட
இதுதான் "ஆதரவாக
இருக்கிறது என்று...... "

இராணுவ வீரர்களுக்கு
எல்லோரும் வீரவணக்கம்
வைப்பார்கள்...
ஆனால்
அந்த இராணுவ வீரர்களே !
"வீரவணக்கம் வைப்பது
பைரவாவிற்கு தான்....!"

*கவிதை ரசிகன்*

🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Mar-24, 7:44 pm)
பார்வை : 21

மேலே