மெட்டியொலி கனவு மெய்ப்படுமோ வாழ்வினிலே

மெட்டியொலி கனவு மெய்ப்படுமோ வாழ்வினிலே

அனைத்துத் துறையில் பெண்கள் உலவினாலும் /
ஆண் ஆதிக்கம் பெண்மையை மதிப்பதில்லை/
வறுமை என்னும் உருவமே முதிர்கன்னி/
வரமாகப் பிறக்கிறாள் தலைக் குழந்தையாக /
குடும்பத்தை தலைதூக்கி தங்கைகளைக் கரையேற்றி/
குடும்பச் சூழலில் முதிர்கன்னி அவதாரம்/

பாவாடைத் தாவணியில் கல்யாணக் கனவுகளுடன்/
பவனி வந்தேன் காலங்கள் கடந்து /
சேலையில் அழகியப் பூஞ்சோலை பூத்திருந்தேன்/
சேவகன் வரவில்லை பெண் கேட்டவர்கள்/
செய்திகளைச் சொல்லி மனம் குளிர /
செய்தித் தொலைக்காட்சியில் மணமகன் தேவை /

விளம்பரம் செய்தும் வியாபாரம் ஆகவில்லை/
விடியல்கள் தினமும் வருகிறது எனக்கு/
வயதுக் கடந்தும் வரதட்சணைக் கொடுமையால்/
விடியல் வரவில்லை தவமிருக்கிறேன் முனிவராக/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:08 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 13

புதிய படைப்புகள்

மேலே