கோடமழக் கொட்டுதடி

கோடமழக் கொட்டுதடி !
——-
கோடமழக் கொட்டுதடி
கொஞ்சிடலாம் வாடிபுள்ள
காடுகரை எல்லாமே
காவிரியா பொங்குதடி்

பருவத்திலே பேஞ்சாக்க
பயிருபச்ச கொழிக்குமடி
பருவப்புள்ள ஒங்கழுத்தில்
பளபளக்கும் ஏந்தாலி

ஒன்னாக ஒழச்சாலே
ஒசந்திடலாம் சத்தியமா
என்னோடு நீயிருந்தா
பொன்னாகும் தொட்டதெலாம்

மானத்து மழயாட்டம்
மாமமக என்னெஞ்சில்
தேனாட்டம் விழுந்தாயே
தேகமெல்லாம் நெறஞ்சாயே

மானம்பாத்த பூமியிலே
மானாவாரி போல்வெளஞ்ச
காலமெல்லாம் ஒன்னுடனே
கலந்திருப்பேன் கண்மணியே

நல்லவங்க ஆசியெல்லாம்
நமக்கிருக்கு செம்பகமே
கொல்லையெல்லாம் பூத்திருச்சு
கொறையுமில்லே கொண்டவளே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (8-Jul-24, 6:50 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 38

மேலே