சுகமான காயங்கள்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
*சுகமான காயங்கள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
கனவே ! கனவே !
கலையாதே!
கண்மணி என்னை
நீ பிரியாதே !
நேரில் பார்க்க
வாய்ப்பில்லையே!
நெஞ்சம் அதனால்
தாங்களையே !
சேர்த்து வைத்த
ஆசைகள் எல்லாம்
கானல் நீராய் ஆனதே....!
சேர்ந்திருந்த
நாட்கள் எல்லாம்
நெஞ்சைப்
புண்ணாக்கிப் போனதே.......!
விடிகின்ற
ஒவ்வொரு விடியலும்
விரக்தியைத்தான் தருகிறதே...!
மடிகின்ற
ஒவ்வொரு நொடியும்
மரண வலியைத் தான்
கொடுக்கிறதே.....!
அழுவாமல்
அமைதியாக இருந்தாலும்
கண்களில்
கண்ணீர் வடிகிறதே...!
கண்களை மூடினாலும்
உறக்கம் என்னவோ
விழித்திருக்கிறதே.....!
சுவாசிப்பதே எனக்கு
சுமையானதால்
வாழ்க்கை
எனக்கு என்னாகுமோ....?
நானே எனக்குப் பகையானதால்
இந்த உலகம்
எனக்கு என்னாகுமோ...?
*கவிதை ரசிகன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
