பிரகாசிக்கும்

பிரகாசிக்கும்....!
02 / 08 / 2024

உன்சொல் மதிக்கப்பட வேண்டுமெனில்
மதிக்கப்பட வேண்டிய இடத்தில் நீ இருக்கவேண்டும்.
உன் சொல்லுக்கு மரியாதை கிடைக்க வேண்டுமெனில்
மரியாதைக்குரிய இடத்தை நீ படைக்கவேண்டும்..
மற்றவரிடத்தில் எதை எதிர்பார்கிறாயோ
மற்றவர்க்கு அதை முதலில் நீ செய்திடு.
உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல்
வெறும் வாய் பேச்சால் பயனில்லை.
மூடிய கைக்குள் இருக்கும் பொருளுக்கு
விலைமதிப்பு விண்ணளவு கூட இருக்கலாம்.
மூடிய வாய்க்குள் இருக்கும் சொல்லுக்கு
தங்கமும் வைரமும் கூட இணையில்லாது போகலாம்.
மனப் புதையலுக்குள் சொல்லை புதைத்து வை
தங்கமும் வைரமுமாய் மின்னி பிரகாசிக்கும்.
உன்மதிப்பும் மரியாதையும் கூடிப் போகும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (2-Aug-24, 7:22 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : piragaasikkum
பார்வை : 31

மேலே