அடிமை இல்லை

அடிமை இல்லை

யாருக்கும் நான்
அடிமை இல்லை
இறைவனுக்கே
நான் அடிமை
இதை சொன்னது
நான் இல்லை

சொன்னது!
காந்தி இல்லை
மாட்டின் லூதர் இல்லை
நெல்சன் மண்டேலா இல்லை

சொன்னது அப்பர்
சொன்ன காலம்
4ம் நூற்றாண்டு
சொன்ன மொழி
யாதும் ஊரே
யாவரும் கேளுங்கள்
என்று முழங்கிய தமிழ்
சொன்னது எங்கே
அரசன் கோட்டையில்
கேட்டு மகிழ்ந்தவன்
நடராஜன்.

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (6-Aug-24, 7:54 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : adimai illai
பார்வை : 39

சிறந்த கவிதைகள்

மேலே