பிறந்தான்……

பிறந்தான்……

பிறந்தான்...வாழ்ந்தான்
இறந்தான்...
என்பதல்ல வாழ்க்கை.
பிறந்தான்.. வாழ்ந்தான்
வாழ்கிறான்...
என்பதே வாழ்க்கை.
நாய் நன்றியையும்,
யானை ஞாபக சக்தியையும்,
கழுதை பொறுமையையும்,
மல்லிகை நறுமணத்தையையும்,
ரோசா அழகையையும்,
வாழை பயன்பாட்டையையும்...
இப்படி பிறந்த ஒவ்வொரு உயிரும்
ஏதோ ஒன்றை பிறந்த பூமிக்கு விட்டு செல்கிறது.
மனிதா...
நீ எதை விட்டுச் செல்லபோகிறாய்?
உன் காலடியையாவது விட்டுச் செல்.
சிந்தி...
உறுதிகொள்..
முயற்சி செய்
செயலாற்று...

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (9-Aug-24, 8:09 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 32

மேலே