செக்காவத்து செராவத்து

வணக்கம் சோசியரே!



@@@@@


வணக்கம், வணக்கம் நட்ராஜ். நான் கணிச்சுச் சொன்னபடியே உன்


மனைவிக்கு ஆண் குழந்தைப் பிறந்திருகுஹ்து. அதுதான்

என்னைத் தேடி வந்துருக்கிறே.


@@@@@


சரியாச் சொன்னீங்க சோசியர் ஐயா.

@@@@@@

நீ இரண்டு மாசத்துக்கு முன்பே உன் மனைவிக்குப் பிறக்கும்


பையனுக்கு 'வத்'துனு முடியும் இந்திப் பேருங்களைத்

தேர்ந்தெடுத்து வைக்கச் சொன்ன. அதுக்கு என்ன காரணம்


நட்ராஜ்?

@@@@@@@@

சொசியர் ஐயா, சின்ன வயசில இருந்தே என் மனைவிக்குப்


பிடிச்ச குழம்பு வத்தக் குழம்புங்க. அதனால எங்க பையனுக்கு

'வத்'னு முடியற இந்திப் பேரா வைக்கணும் நானும் என் மனைவியும்

ஆசைப்படறோம்.

@@@@@

உங்க ஆசை வீண் போகல. இன்னிக்குக் காலைல செய்திதாள்ல

'ஷெக்காவத், ஷெராவத்'னு இரண்டு பேருங்களைப் பார்த்தேன்,

அந்த இரண்டு பேருங்களிலே ஒரு பேரை உங்க பையனுக்கு

வச்சிருங்கோ. உங்க பையன் ராசிப்படி இரஃண்டு பேருங்களுமே

உங்க பையனுக்கு ராசியான பேருங்க.

@@@@@@@@@@@@@

செக்கவத்து, செராவத்து. சுவீட்டான இந்திப் பேருங்க சோசியர்


ஐயா.

எழுதியவர் : மலர் (10-Aug-24, 7:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே