சமூக சேவகர் திரு RKT ராஜகோபால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவி

27.8.24 அன்று பிறந்தநாள்
காணும்
அன்பு அண்ணன் சமூக சேவகர் ஆர் கே டி ராஜகோபால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

வெள்ளை மனம்
கொண்ட பால்
ஆவின் பாலா இல்லை
பூவின் பாலா இல்லை
கால் தடமே பதியாத ஒரு தீவின் பாலா
பான்லே பாலா இல்லவே இல்லை

வெள்ளை மனம்
கொண்ட பால்
பிள்ளை மனம்
கொண்ட பால்
கிள்ளை மனம்
கொண்ட பால்
தில்லை மனம்
கொண்ட பால்
அவர்தான்
அண்ணன் ராஜகோபால்

அவர் வாழ்க்கை மளிகையில் தொடங்கி மாளிகையைத் தொட்டது

ஆரம்பத்தில் அவர் வாழ்க்கை இருந்தது மங்களா
தன்னம்பிக்கையோடு கடினமாய் உழைத்தார் சிங்கிளா
இன்றோ அவருக்கு இருக்கிறது
பல இடத்தில் பங்களா

இவர் சங்ககாலத்தில்
பிறக்காது
எங்க காலத்தில் பிறந்த
பாரி

ஆண்
அழகன் அல்ல
அவர்
ஆனாலும் அழகன்

காலையில் இவருக்கு பசியாறத் தேவை பூரி
மதியம் ஏழை பெண்களுக்குக் கொடுக்கத் தேவை சாரி

விவசாயி நிலங்களுக்கு இவர் மாரி
விசமிகளுக்கு மட்டும் இவர் ஒரு மாறி

அநியாயம் செய்தால் அவர் முகத்தில் உமிழ்ந்திடுவார் காரி
ஏழை மக்களுக்கு
கையில் இருப்பதை அள்ளி வழங்குகிறார் வாரி ஏனென்றால் இவர் காரி

இவர் மனமோ இனிக்கின்ற சர்க்கரை
இவர் உடம்பில் பார் மொய்க்கும் ஈ
ஏனென்றால் இவர் பாரி

இவர் தோளில் எப்பொழுதும் இருக்கும் ஓர் ஈ ஏன் என்றால்
பிறருக்கு கொடுப்பதில் இவர் ஓரி

பாரி மாரி காரி ஓரி இவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்கின்றோம் சாரி
ஏனென்றால் ஏழை மக்களுக்கு ராஜகோபால் அண்ணன் தான் கொடுத்தார் வாரி வாரி அவர்கள் உடுத்த சாரி

பூத்துறை கிராமத்தை
பூ துறை கிராமமாய்
மாற்றியவர் இவர்தான்

இவர் அனைவரிடத்திலும் காட்டும் பூ அன்பு
இவருக்கு மிகவும் பிடித்த பூ அது நட்பு
இவர் நட்பில் எப்பொழுதும் காணலாம் கற்பு
புதுவைக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவரின் பிறப்பு

இவரின் நிறம் தான் கொஞ்சம் கருப்பு
யார் உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார் மறுப்பு

இவரின் பேச்சு பிறர் கவலைக்கு மருந்தாகும் சிரப்பு
யாருக்கு பிறந்தநாள் என்றாலும் அவரை சிறப்பு செய்வதே இவரின் தனிச்சிறப்பு

இவர் சண்முகபுரத்தில்
இருளில் கிடக்கும் ஏழை மக்களுக்கு ஒளி கொடுக்கத் தோன்றிய சன்
அரவிந்தன் இவருடைய சன்
இவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம்
அடைவார் வின்

பிறருக்கு துயரம் என்றால் அருவியை ஊற்றெடுப்பது இவரின் கண்

இவரைப் போல் ஒரு உத்தமரை மகனாய் பெற்றதில் பெருமை கொள்கிறது இப்புதுவை மண்

இவர் ஏழை மக்களுக்கு பசியாற கிடைத்த பன்
இனி இவரி புகழைப் பாடப் போகிறது என் கவிதைப் பண்

எப்பொழுதும் முழுக்கை அணிந்தவர்
60 வயது கடந்தும் இன்னும் தலையில் வழுக்கை அணியாதவர்

உயரத்தில் தான் இவர் கொஞ்சம் குள்ளல் ஆனால் பிறர் துயரத்தில் வாரி வழங்குவதில்
இவரின் நெஞ்சம் வள்ளல்

கொடை வள்ளல் கேள்விப்பட்டிருப்பீர்கள் கோடையிலும் வழங்கும் இவரோ கோடை வள்ளல்

தேவலோகத்தில் இந்திரனையும் கர்ணனையும்
62 ஆண்டுகளாய்
காணவில்லை என்று கண்ணன் தேடிக் கொண்டிருக்கிறான்
இருவரும் உன் உருவில் இந்தியாவில் பிறந்திருப்பது தெரியாமல்

பசியோடு இருப்பவருக்கு பருக்கை
அள்ளிக் கொடுக்கவே இறைவன் படைத்திருக்கிறான் இவருக்கு இரு கை
இறைவன் ஒதுக்கித் தான் வைத்திருக்கிறான்
இவருக்கோ சட்டமன்றத்தில் ஒரு இருக்கை
இதுதான் இயற்கை

இவர்
எங்களின் அண்ணன்
கார்குழல் வண்ணன்
எங்கள் இதயங்களை ஆளும் மன்னன்

இந்த மாசற்ற மனிதநேயர்
ஊராண்டும் நூறாண்டும் இப்பாராண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

கவிஞர் புதுவை குமார்
நிறுவனர்
உதவும் இதயம் பேரியக்கம்....
உலக சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு
9942994112

எழுதியவர் : குமார் (18-Aug-24, 12:04 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 34

மேலே