ஆற்றிலே போட்டாலும் அளந்தே போடு

எதை நாம் கொண்டுவந்தோம்
எதை நாம் கொண்டுசெல்வோம் என்று
ஏமாந்த வாழ்வியல் கொண்ட
எட்டாவது வள்ளலின்
ஏகாந்த புத்திரி நான்!

கூட்டம்கூட்டமாய் கூடவே
கொண்டாடி தீர்த்தவர்கள்
கூடுவிட்டு உயிர் போனபின்
கொள்ளிக்கும் வரவில்லை,
சொல்லி அழவும் ஆளில்லை என்றபோது

வாழக்கை நெற்றிப்பொட்டில்
அடித்து சொன்னது
ஆற்றிலே போட்டாலும்
அளந்தே போடு - என்று

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (31-Aug-24, 4:21 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 21

மேலே