ஏன் பிறந்தோம்

ஏன் பிறந்தோம்?
உண்பதற்காக

ஏன் வளர்க்கிறோம்?
உண்ணத் தான்

எப்படி வளர்ந்தோம்?
உண்டுதான்

யாருக்காக வாழ்கிறோம்?
உணவுக்காகத்தான்

வாழ்க்கையில் நமக்கு மிகவும்
முக்கியமானது எது?
உணவு

ஏன் கல்வி கற்கிறோம்?
உண்பதற்காக

ஏன் வேலைக்கு செல்கிறோம்?
உணவுக்காக

எது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது?
உண்பது

நாம் யாருக்கு அதிகம் நன்றி சொல்லவேண்டும் ?
உணவுக்கு

தாயைவிட உயர்வானது எது?
அவள் தரும் உணவு

தந்தையைவிட பெரிது எது?
ஹோட்டலில் அவர் வாங்கித்தரும் உணவு

காதல் பெரிதா, உணவு பெரிதா?
உணவுதான்

ஒரு நல்ல நண்பனைவிட உயர்ந்தது எது?
நல்ல சுவையான உணவு

உலகத்தில் என்ன நடந்தாலும் நடக்கட்டும்
இது இருந்தால் நீ கவலையில்லாமல் வாழலாம், அது எது?
உணவு

நாம் பிறருடன் பழகுவது, பல செயல்களை செய்வது, நடப்பது
ஓடுவது, ஆடுவது, இவையெல்லாம் என்ன?
அடுத்த உணவு கிடைக்கும்வரை ஒவ்வொருவரும் போடும் நாடகம்

நாம் ஏன் இறக்கிறோம்?
மீண்டும் பிறந்து உண்ணத்தான்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Sep-24, 11:18 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : aen piranthom
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே