காதல் சங்கமமில்லா புனிதம்

நினைவலைகள்
நிமிடத்தில் நீர்த்துவிடும்
நீர் தவளையாய்
நீர் அமைத்த உறவுகள்
நீருக்குள் ஓலமிடும்.

எப்படியோ வந்து
எப்படியோ சேர்ந்து
எப்படியோ பிரிந்து
எப்படியோ வாழ
இப்படியோர் தேவையா...

சேர்வதும், பிரிவதும்
மட்டுமா காதல் - இல்லை
சேர்வதும், பிரிவதும்
உயிரால் ஆன உடல்கள், மனமல்ல
சிந்தியுங்கள்!
காதல், சங்கமமில்லா புனிதம்.

எழுதியவர் : avighaya (10-Aug-10, 10:19 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 516

மேலே