அம்மா - காவல் தெய்வம்.,

கண் திறந்து
உலகை காணும்
முன் உன்னை காக்கும்
தெய்வம்.
பிறந்து வளர்கையில்
உலகின் தவறுகளில்
இருந்து உன்னை காக்கும்
தெய்வம்.
வளர்ந்து வாலிபம்
எட்டி - காதல் மனதில்
மலர்ந்து மணமுடிக்கும் வரை
காக்கும் தெய்வம்.
கரைந்து போன வாலிபம்
நிறைந்து நிற்கும் வயோதிகம்.,
அன்றும் உயிரிருந்தால்
உன்னை காக்க மட்டுமே
நினைக்கும் காவல்
தெய்வம் - அம்மா.,