சினேகிதியே

விழலைப் பருவம் தொடக்கம்
விட்டுப்பிரியாது இதயத்துடன்
ஒட்டி வந்த உறவு - உன்
பிரிவினால் என்னிதயம் -இங்கே
ஆற்றுவாரின்றி அழுகிறதடி...

எவ்வளவு இனிமையான நாட்கள்
நாம் பழகிய அந்தப்
பள்ளிப் பருவம்
பசுமரத்தாணிபோல் - என்
நினைவுகளில் இன்னும் இன்னும்
எங்கே சென்றாய்- உன்
நினைவுகளுடன் காத்திருக்கிறேன்
என்னை மறந்து
நீ வரும் நாளுக்காய்.........


க.பா.சுரேன்

எழுதியவர் : க.பா.சுரேன் (2-Nov-11, 10:48 pm)
பார்வை : 1038

மேலே