விலகலின் வலிகள்
இளையவனகா இருந்தாலும்
இறங்கிவந்து உன்னிடம்
இரந்து கேட்பதெல்லாம்
மங்கையாக இருந்தும்
மழலையாகா உன்னோடு
மனம்விட்டு பழகியதால்
மானசீகமாக உன்னிடம்
மண்டிஇட்டு கேட்கின்றேன்
மன்னித்து விடு என்னை
செதுக்கும் போது வலிஇல்லையென
மௌனம் சாதிக்க நான்
கருங்கல் இல்லை
தொட்டதும் உயிர்விடும்
நீர்க்குமிழி போல்
பலவீனமானவள் நான்
அசாதாரனமாய் இழைத்த
தவறுகளையும் குற்றங்களையும்
நானே ஒப்புக்கொள்கிறேன்
உனது மௌனங்களை கலைத்து
என் மீது உன்னக்கு உள்ள
சினத்தை சீண்டிப்பார்க்காமல்
சிரமமாய் இருந்தாலும்
அமைதியாய் ஒதுங்கியே இருக்கிறேன்