கனவல்ல காதல் கலைத்துவிட

உன்னை முதலில்
பார்த்த பொழுது
பிடிக்கவில்லை !
இப்பொது
உன்னைத்தவிர !

இன்றுவரை
எத்தனையோ நாட்களை
கழித்துவிட்டேன்!
உன் நினைவுகளின்
உபயத்தால்

ஒருபுறம் வேதனையாக
இருந்தாலும் மறுபுறம்
ஏனோ- மனம் !
அதையே விரும்புகிறது

நாட்கள்
பல தேய்ந்தாலும்
உன் நினைவுகளுக்கு
இல்லை தேய்மானம் !

நீ நிழலலானாய்!
என் காதல்
கனவானது!

உறக்கம் முடிந்தாலும்
இன்னும்
கனவு மட்டும்
தொடர்கிறது !

எங்கோ?எப்போதோ?
அடுத்து
என் பார்வையில் படுவது...

இவ்வளவு
புலம்பினாலும்
மனம் ஏனோ
மறந்தும்
இன்னொருத்தியை நினைக்க
மறுக்கிறது !!

ஒரு வழியாய்
கனவை களைத்துவிட்டேன் !
சரி..............
காதலை என்ன
செய்வது

எழுதியவர் : கவிஸ்ரீகவி (16-Nov-11, 11:01 pm)
பார்வை : 425

மேலே