தாய் ( vaa vadivel murugaa mettu)

அம்மா பஜன்.

வா வருவாய் தாயே
வந்து என்னைக் காத்திடவா நீ......(வா)

ஐயிரண்டு திங்கள் என்னை
உந்தன் மணிவயிற்றில் காத்தாய்
அகமகிழ்ந்து என்னை நீ
அன்புடன் வளர்த்திட்டாய் (வா)

பைந்தமிழ் சரம் எடுத்து
உந்தன் பாத மலர் பணிந்திடுவேன்
பாமலர் கேட்டு உந்தன்
என் பாமலர் கேட்டு உந்தன்...............
பூவிழி மலர்ந்தருள்வாய் (வா)

திருநிறைச் செல்வி உந்தன்
திருவடி மலர் பணிந்தேன்
திடமுடன் காத்திடுவாய்..........
தீமையெல்லாம் போக்கிடுவாய்,,,,,,,,,

நீ வா வருவாய் தாயே..........
வந்து என்னைக் காத்தருவாய்..................

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (17-Nov-11, 7:35 am)
பார்வை : 258

மேலே