திருவிழா...

சொந்த ஊர் திருவிழா ...

14 வருட வனவாசத்திற்கு
(நரக வாழ்கைக்கு ) பிறகு ,,
பிறந்த ஊருக்கு பயணம் .....

கையில் ரௌத்திரமும் , கண்ணில் கருணையும் ,,
கொண்டு முதல் ஆளாக வரவேற்றார் ,,
எல்லை தெய்வம்
அய்யனார்...

நான் ஊஞ்சல் ஆடிய ஆழ மரமும் ,,
நான் கில்லி ஆடிய கருவேலங்காடும் ,,
அடுத்த தலைமுறை பிள்ளைகளோடு
விளையாடி கொண்டிருந்தன....

நான் ஒற்றை சக்கர வண்டி ஓட்டிய மண் ரோடு ,,
இப்போது தார் ரோடு ஆகா மாறி இருந்தது ...

எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தக் கிணறு ,,
தடுப்பு சுவர் வைத்து பூட்டப் பட்டு இருந்தது ..

திண்ணை வைத்து கட்டப் பட்டு இருந்த வீடுகளில் ,,
புதியதாய் காம்பவுண்ட் சுவர் முளைத்து இருந்தது ...

ஊருகண்ணு , உறவுகண்ணு, பேய்கண்ணு,
பிசாசுகண்ணு எல்லாகண்ணும் ஒழுஞ்சு போக,,
என ஆரத்தி எடுத்த அத்தை ....

கோவிலுக்கு போறப்ப ,,
பேண்ட்டு சட்டைல வர ,,
போய் வேட்டி கட்டிட்டு வா ,,
என அதட்டிய பெரியப்பா ...

என்ன கொழுந்தனாரே இந்த திருவிழால,,
எனக்கு தங்கச்சி பாத்திடலாம என ,,
கிண்டலடித்த அண்ணி .


அப்போ என்னையக் கட்டிக்க மாட்டியா
என கோவித்துக் கொண்ட
10 வயது அக்காள்க்
குழந்தை ....


வாடா வளந்தவனே என்று ,,
பழைய பட்ட பெயரை மறக்காமல் ,,
இருக்கும் பால்யவயது தோழர்கள் ..



என்ன விசு நல்லா இருக்கியா ,,
ஆளே மாறிட்ட, என இடுப்பில்
கை குழந்தையுடன் நலம் விசாரித்த
பால்யவயது தோழி...


சாந்தமாய் நலம் விசாரித்துவிட்டு,
உடுக்கை சத்தம் கேட்டவுடன் ,
கருப்பன்னசாமியாய் அவதாரம் எடுத்த சித்தப்பா ..

என் பேராண்டி டவுன் ல
என்ஜினியர் வேல பாக்குறான்
என சக வயது தோழியிடம்
பெருமை பீத்திகொண்ட
ஆத்தா .....

எலேய் உனக்கு ஆறு வயசுல
வெவரம் தெரியாதப்ப
இந்த திருவிழால தான்
தொலஞ்சு போய் எங்கள பாடாப் படுத்தன...
என்ற தாத்தா...

எல்லோருக்கும் கை அசைத்துவிட்டு
காரின் இருக்கையில் அமர்ந்து கண்களை முடிய போது
விவரம் தெரிந்தும் தொலைந்தே போய் இருந்தேன்
இந்த திருவிழாவில் .......

எழுதியவர் : விஸ்வ 32 (17-Nov-11, 9:20 am)
சேர்த்தது : viswa 32
பார்வை : 417

மேலே