நமக்கு கிடைத்த உயர்வு (இலவசம்)
நாம் வாங்கும்
ஒவ்வொரு இலவசமும்
நமக்கும் நம் சந்ததிக்கும்
நாமே உருவாக்கும் கடன் சுமையாகும் !
நாம் வாங்கும்
ஒவ்வொரு பொருளுக்கு ஈடான
மற்றொரு பொருளின் இலவசம்
அந்த பொருளின் தரத்தை
நமக்கு நாமே குறைக்கும் செயலாகும் !
இதனால் "நமக்கு கிடைத்ததுதான்"
மின் கட்டண உயர்வு !
பஸ் கட்டண உயர்வு !
பால் கட்டண உயர்வு !
பெட்ரோல் கட்டண உயர்வு !
அரசு அதிகாரிகள் சம்பள உயர்வு !
இதனால் நடுத்தர வர்க்கத்திற்கு இன்று
கிடைத்த புதிய "இலவசம்"
நம் "இதய துடிப்பை" இலவசமாக
அதிகரித்துக்கொள்ளலாம்
இது கவிதை அல்ல ஒரு இலவசம்