மலையாளிப்பூனை

ஒருநாள்........
நான் விழித்தெழுந்தேன்
மொழி அறியாத பூமியில்
நான் என்பது ஞான் ஆக
ஓ! எனக்கு புரியவில்லை
அதென்ன ஞான்?
ஜோசிக்க முன் ...........
சட்டென்று ஒரு பூனை
என் பந்தை தட்டிக்கொண்டு ஓடியது
ஆம் ! அதை நான் ரசிக்கவும் செய்தேன்
ஓங்கி எழுந்து ஒருமுறை
பந்தையும் தட்டியது
ஓ ! அதுவும் அழகாக தான் இருந்தது
அடுத்த நொடி -தடக்கி விழுந்து
அடிபட்டும் விட்டது
ஐயோ ! பவம் என்று
ஓடிப்போகவும் செய்தேன்
தடக்கி விழுந்த பூனையோ !
பாய்ந்து எழாமல் சோம்பல் முறித்தது
இது வினோதம் என்றேன் !

மறுபடியும் நான் ....
சாப்பிடுவதற்கு நெத்தலிமீனும்
குடிக்க தண்ணீரும் குடுத்தேன்
கோபத்துடன் மறுத்துக்கொண்டது
ஏன் எனக்கேட்டேன் ?
நான் பாறை மீனும்
குடிக்க பாலும் தான் குடிப்பேன் என்றது

ஆச்சரியம் கொண்டு ....
விரும்பிய உணவை குடுக்கவும் செய்தேன்
அதை சாப்பிடாமல் தட்டி விட்டது
கோபம் கொண்டு அடிக்கவும் சென்றேன்
ஒரு சொல் என்றது ,,
திரும்பி பார்த்தபொழுது
நான் மலயாளிப்பூனை
எது கிடைத்தாலும் உண்பேன்
மறுத்து நான் ............
ஏன் நீ சாப்பிட வில்லை என்றேன்
நீ சாப்பிடகூடாது என்பதற்காக
உன் உணவை எனக்கு வைக்கச்சொன்னேன்
நீ வைத்த நொடி அதை தட்டி விடேன்
கலை உணவு உனக்கு கிடையாது
என சிரித்து சென்றது !!!!

நான் விழித்துக்கொண்டேன்
மனிதர்களே !!!!!!!!!!!

ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை
இந்த இயல்பு அந்த மண்ணுக்கு உரியது
பூனையும் விதிவிலக்கா??
நான் விழித்துக்கொண்டது
மொழி அறியாத பூமியில் அல்ல
கேரளத்தில் தான் !!!!!!!

எழுதியவர் : அகிரா (20-Nov-11, 9:18 pm)
சேர்த்தது : agira
பார்வை : 238

மேலே