அக்கா
அக்கா .......
தவம் இல்லை புண்ணியம் செய்யவில்லை
தேடி அலைந்து எனக்காய்
இறைவன் எதுவும் தரவும் இல்லை
இருந்தும் ... எனக்காய் நீ
வாழ்வின் நெடும்பரப்பில்
என்னில்
முழுப்பக்கங்களை சொன்தமானதாய்
ஆக்க முடியும் என்கிறாய்
அதுவும் உன்னால் மட்டும் என்கிறாய்
அது எப்படி சாத்தியமாகும் ??
உடல் விட்டு கூடுபாயும் அவியும்
நான் இல்லை
உன்வார்த்தைகள் என் காலத்தின்
பரப்பில் விரிந்து கிடக்கையில்
அதை எப்படி நான் தாட்டிப் பிரிவேன்
என் உடலின் இரத்த ஓட்டங்கள்
உன் கையின் அசைவின் மூலம்
எனக்கு உயிர் தருபதாக ....
நீ பூமியாய் இருக்கையில்
உன்னை சுத்திவரும் துணைக்கோள்
நான் ஆக
செய்கையில் மாற்றம் வரும் ஆகின்
உன்னில் தான் மாறுதல் வேண்டும்
அப்பொழுது சொல்
நான் உன்னை தாண்டிச்செல்கின்றேன்
என ...........