செம்மணிப் புதை குழி



புதை குளிகள்துடிக்கையில்
மண்ணும் மூச்சு வாங்கும்
கைகள் கரம் கோர்க்க
ஏங்கி கைகள் நீளும்
துடிக்கும் !!!
எதனை சோகங்கள்
உயிர்ப்புடன் பேச நினைக்கும்
இந்த துடிப்பு!!!
அடங்கா
வெறியாய்
கிளப்பும்
எல்லை அற்ற கோர தாண்டவத்தை
எலும்புக்கூடுகள் கிழிந்த உடலுடன்
தன அங்கங்களை தேடி
தமிழனின் வடையை அறிந்து அலறும்
எங்கே என் உயிர்
எங்கே என் உடல்
எங்கே என் சொந்தம்

முட்புதர்களும் என் ரத்த நாளங்களை
ருசித்தது ஏன் ?
மரம் ,செடி, கொடிகள் ,பறவைகளும்
சாட்சியாய் இல்லாமல் அமைதி
காத்தது ஏன் ?
என் துவிச்சக்கர வண்டி
நான் விட்ட இடத்திலேயே இருக்க
என் செருப்பு புத்தகங்கள் எல்லாம்
கசங்காமல் புதிசாய் இருக்க
நான் மட்டும் பொசுங்கியது ஏன் ?

பேரம் பேசப்படவில்லை
நான் விரும்பியும் ஏற்கவில்லை
அந்த கொடியவன் என்னை
தன இச்சைக்குள் உள்ளாகியது ஏன் ?

என் உடல் பிய்த்து எறியப்படது
என் உணர்வுகள் அடக்கி கிளிகப்படது
மூச்சு சுவாலைகள் குருதியாய் வழிந்தோட
சலனம் இல்லாமல் அமைதியாய்
என் உயிரும்
என் வாழ்வும்
மண்ணுக்குள் மண்ணாக புதைகப்படது

விதியின் தாண்டவம்
பின்னிப்பிணையும்
மனிதனின் மொழியும்
மாற்றமும் தின்னும்
எதனை உயிரை
இன்னமும் எதனை நாட்களில் !!!

எழுதியவர் : அகிரா (20-Nov-11, 9:27 pm)
சேர்த்தது : agira
பார்வை : 291

மேலே