மரணத்தில் மட்டுமே வாழ்கிறான் இறைவன்

வாழ்க்கை ஒரு ரயில் பயணம் தானடா
ஏறும் இடமும் தெரியல
இறங்கும் இடமும் தெரியல
ரயில் போயி சேரும் இடமும் தெரியல
மொத்தத்தில் ஒண்ணுமே புரியல டா

உயிர் உடலைப் பிரிவது தலையின் விதியோ
இல்லை இறைவன் செய்யும் சதியோ
சொந்தங்கள் சிந்திடும் கண்ணீரை மட்டும்
அவன் தான் பதில் சொல்லணும்
பிரிந்து சென்ற உயிருக்கு மட்டும்

மரணத்தில் மட்டுமே வாழ்கிறான் இறைவன்
மரணத்தை தடுக்கும் சக்தி அது
மனிதனுக்கு மட்டும் வந்து விட்டால்
வெளுத்துப் போகுமடா
இறைவனின் சாயம்

எழுதியவர் : வில்சன் (21-Nov-11, 2:28 pm)
பார்வை : 342

மேலே