என் அழுகுரல் (இதை padikkaatheer) ~உண்மை சம்பவம்~

எழில் கொஞ்சும்
தமிழ் தோட்டமாம்
மலைகளின் ராணியில்
என் டைரியின் பக்கங்கள் -
துள்ளி செல்லும்
பள்ளி பருவம்
ஐவிரல் வகுப்பில் நான் -
ஒருநாள்
ஒற்றை கால் தோய்ந்த பயணி
பயணியர் நிலையத்தில் -
கொண்டு செல்ல மனமிருந்தும்
தொண்டு செய்ய பணமில்லை
ஏக்கத்துடன் வீட்டில் நான் -
அன்னை ஓர் ஆலயம் -ஆம்
அன்றிரவு அன்னையின் கையில்
கண்டேன் என் தேடலின்
பயனான அப்
பயணியை - "நாய்க்குட்டி"
அவள் ஓர் பெண்
குட்டிக்கு ஓர் இடம்
தொட்டில் குழந்தை உணவில் பாதி
அன்று மருத்துவரானேன்
அம்மா சொன்னார்கள்
எலியும் புலியுமாக
குட்டியும் எந்தையும்
சில தினங்களில்
பேருந்து
நடராஜா சர்வீசாக
பேருந்து பணம்
ஐந்து பைசா ஹார்லிக்ஸ்
மிட்டாயாக - குட்டிக்கு :
குழந்தை தவழ்வது போல
குட்டி மூன்று காலில்
வேண்டா வெறுப்பு
வாகனம் எமனாக -
பட்ட காலிலே அடி மீண்டும்
மாசில்லா என் அன்பு
காசில்லா என் மருத்துவம் - முன் தோற்க
" மூன்று கால் நாற்காலி
முட்டி உடைக்கும்
பெண் பிள்ளை வீட்டுக்கு உதவாது
கருத்து வலுப்பெற்று
ஆதரவு கொடுத்த அன்னையே
மாவிலை தோரணங்களை இறக்கி
தேயிலை பொட்டலக் காட்டிற்குள் என்
தேடலின் பிறவியை தொலைத்தாள் " -
விண்மீன்களுள் நிலவு ஒளிரும்
என் விழிகளில்
தேயிலை செடிகளுள் நிலவு ஒளிரவில்லை ...........!
என் நாய்க்குட்டிக்காக....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!~!!!!!!!!!!!!


எழுதியவர் : ஜெயபால் ganeshan (22-Nov-11, 3:09 pm)
பார்வை : 291

மேலே