கர்ம வீரர் காமராசர்
கர்ம வீரர் காமராசர்
ஆண்டவன் ஆனவன் நீ...!
மாநிலம் ஆண்டவன் ஆனவன் நீ...!
மடி குழந்தாய் படியென்று
பாடசாலை உருவாக்கியவன் நீ...!
வறுமை நாட்டிற்குப் பிணியென்று
மனிதா..! உனக்குப் பணியென்று
ஆலைகள் உருவாக்கியன் நீ...!
அரசியல் கண்டத்தில்
மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு
சமத்துவம் காத்தவன் நீ...!
அரசியலைத் தூய்மையில்
நாடும் வீடும் காத்தவன் நீ..!
மரணமில்லா கல்வி செய்து
எதிர்காலம் படைத்தவன் நீ..!
கல்விக் கண்களால்
சாதி மத பேதம் ஒழித்தவன் நீ..!
முத்தொழிலை முறையே செய்ததாலும்
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதாலும்
ஆண்டவன் ஆனவன் நீ..!
ஆண்டவனாய் ... மா நிலம் ஆண்டவனாய்
நீ இருந்தும்..,
உன்னிடம் உனக்கு அன்பு இல்லை
அன்பை மக்களிடம் வைத்ததால்..
நீ தோல்வியடைந்தவன் இல்லை
அரியணை ஏறியவன் என்பதால்
நீ...பின்சொல் கேட்டாயில்லை
நீ...தன்சொல்லை காப்பாற்றியதால்
உன்னிடம் கறுப்பு இல்லை
நாடாளும் பொறுப்பு உனக்கிருந்ததால்.
நீ ..விருது வாங்கியவன் இல்லை
விருதை நகருக்கே கொடுத்திருப்பதால்
நீயோ ..,
ஏரிகளை அமைத்தாய்
தாமரைப்பூக்கள் வாழ்த்தியது
ஆறுகளை அமைத்தாய்
அறுவடைப் பயிர்கள் வாழ்த்தியது
உள்ளூரில் பணிமனைகள் அமைத்தாய்
வெளி நாடும் வாழ்த்தியது
உன்னை வணங்காமல்
எம் கைகள் மட்டும் எப்படி இருந்திடும்..?
இயற்கையே...!
இயற்கையாய் உம்மை வாழ்த்தும் போது.