Password - கடவுச் சொல்

அடிக்கடி மாற்றச் சொல்வதால்
அடிக்கடி பெயர் மாற்றுகின்றேன்
உனக்கு!
வேறொருவரின் பெயரை வைத்தால்
ஞாபகம் இருக்குமா
சொல் அன்பே?

உன்னை நினைத்து வைக்கும்
போதெல்லாம்
உனக்கு நான் வைக்கும்
செல்லப் பெயர்களின்
எண்ணிக்கை கூடுகிறது...

உனது பெற்றோரை
தாண்டி விட்டேன்...
இன்றோடு நான் உனக்கு
இருபத்திஏழு முறை
பெயர் வைத்திருக்கிறேன்

எனக்கு மட்டும் தெரிந்த
உனது பெயர்கள்...
கடவுச் சொற்களாக...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Nov-11, 5:43 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 278

மேலே