தமிழர்களின் உழவுத்தொழில்...

தமிழனே..!
உழவுக்கே உறவான தமிழ்நாட்டில் பிறந்த நீ...
தமிழை அமுதமென ருசித்திடு...

உலகத்தில் தமிழ் பழமை மொழி என்றும்... அதுவே
என்றும் முதன்மை மொழி என்றும் நீ முழங்கிடு...

விஞ்ஞானத்தால் உழவு களவு போகிறது...
உன் உழவை காக்க., ஏர் கொண்டு வா.,
தமிழனே..! நீ ஏர் கொண்டு வா...

விஞ்ஞானம் விடம் போல பரவினாலும்., உன்
உழவுத்தொழிலால் உலகத்திற்கு உயிரூட்டு....

உலகத்தார்க்கு உண்ண உணவு இல்லை என்றால் அது உழவுத்தொழிலுக்கு ஏற்பட்ட தோல்வி...

தோல்வியா..?

அது நம்மவர்க்கு இல்லை என்று.,
உலகத்தார்க்கு உணர்த்திடு ...

அதர்க்கு நீ தினமும் உழைத்திடு
உலகத்தில் நீ உயர்ந்திடு ....

வாழ்க தமிழ்..! வளர்க உழவுத்தொழில்...

எழுதியவர் : பாலாசகுந்தன் (30-Nov-11, 4:34 pm)
பார்வை : 1624

மேலே