காதலுற்றேன்....
முதல் முறை நுகர்ந்தேன்
காகிதபூவின் நறுமணத்தை.
சற்றே சலித்துகொண்டது
என் நிலைக்கண்ணாடி.
எதிர்பாரா சண்டை
விழியோடு இமைக்கு.
எனக்கே தெரியாமல்
ஏதேதோ கேட்டது, காதுகள்.
திடிரென்று மறந்தது
பன்னிரெண்டு உயிரும்.
மென்று தின்றேன்
தண்ணீரை.
மெதுவாய் உணர்ந்தேன்
அசிரீரி அழைப்பதை,
'கிறுக்கா நீ காதலுட்றாய் .....'