மௌன மொழிகளின் கீதை


போக போக தெரியும்
புன்னகையின் அழகு புரியும்
பார்க்கப் பார்க்க புரியும்
விழிகளில் கயலா காதலா
அல்லது இரண்டுமா என்பது தெரியும்
படிக்கப் படிக்க சுவைக்கும்
கவிதை அழகு நெஞ்சில் விரியும்
படித்து முடித்திட மனம் நினைக்கும்
முடிந்திடாமல் பக்கம் பக்கமாய் விரியும்
இது மாலை எழுதும் கவிதை
மௌன மொழிகளின் கீதை
கண்கள் செய்யும் அற்புதம்
காதல் எனும் தத்துவம்

---கவின் சாரலன்


எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-11, 10:07 am)
பார்வை : 302

மேலே