மின்விசிறியின் ஆதங்கம்

உறங்குபவனை
ஒவ்வொரு நாளும் ஓங்கி அடிக்கின்றேன்
ஒய்வெடுக்கும் மனிதனுக்காக !
இருந்தபோதிலும்
என் கைவிலங்கு விடுவிக்கப்படவில்லை.

இறக்கைகளை சுழற்றினேன்
எதையாவது பற்றிக்கொண்டு
பறந்துவிடலாம் என்று
ஆனால்
இதுநாள்வரை எதுவும் அகப்படவில்லை
நான் விரட்டியடித்த காற்றை தவிர!

எழுதியவர் : (14-Dec-11, 12:01 pm)
சேர்த்தது : shreesharaa
பார்வை : 289

மேலே