அவள் நினைவுகளே

கனவொன்று கண்டேன்
நேற்றிரவு
தூக்கத்தை தொலைத்தேன்
இன்றிரவு
தனிமையை வேண்டுகிறேன்
நாளையிரவு
ஞாபகங்களால் வாழ்க்கை
மாறியது எளிவு
என்றென்றும் நமக்குள்
இல்லை ஒரு பிளவு

தனிமையை மட்டும்
நேசித்தேன்
ஒற்றியடி பாதையில்
பயணித்தேன்
அங்கேயும் வந்தாய்
பின்தொடர்ந்து

நான் மறக்க துடிக்கும்
என் வாழ்க்கை
புத்தகத்தின் இருண்ட
பக்கங்களான
அவள் நினைவுகளே

எழுதியவர் : aafi (17-Dec-11, 4:32 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 493

மேலே