அவ ஊசிவிழி பார்வையால....

பிள்ளையாரு செலைய தூக்கி சின்னபுள்ள வந்தாடா
பச்சபுள்ள ஏ மனச பறிச்சிக்கிட்டு போனாடா
கண்ணாடியில் வளையல் போட்டு கண்ணழகி வந்தாடா
கண்ணடிச்சி ஏ மனச கடத்திக்கிட்டு போனாடா
ரெட்டஜட கட்டிக்கிட்டு பச்சைக்கிளி வந்தாடா
பட்டாசப்போல் ஏ மனச பத்தவச்சி போனாடா
தாவணிய போட்டுக்கிட்டு தங்கமயில் வந்தாடா
தங்கத்தபோல் ஏ மனச உருகவச்சி போனாடா
[பிள்ளையாரு செலைய]...........
பாசிமணி கோர்த்து வச்சி
காதல் வலை போட்டாடா
அவ ஊசிவிழி பார்வையால
உறக்கம் கெட்டு போனேண்டா
கண்ணாம்பூச்சி ஆட்டமாடி
ஏ கண்ணக்கட்டி விட்டாடா
பம்பரமா சுத்திகிட்டு
அவ பின்னாடியே போனேண்டா
[பிள்ளையாரு செலைய]...........
சின்னச்சிட்டு சிரிப்பால
சின்னாபின்னம் ஆனேன்டா
அவ சிந்தும் துளி வியர்வையாள
சில்லறையா போனேண்டா
அவ கால்கொலுசின் தாளம் கேட்க
கட்டெறும்பா ஆனேன்டா
அவ கட்டிமுத்தம் தந்திடவே
தேனா மாறி போனேண்டா
[பிள்ளையாரு செலைய]...........