கேள்விகள்.......?
அம்மா!......?
ஏனம்மா அழுகிறாய்?
பாறை சுமக்க தானே செல்கிறேன்..,
பள்ளிக்கூடம் அல்லவே!...,
வயிற்றுக்கு ஈர துணிய கட்ட சொல்கிறாய்?
எப்பொழுதம்மா புத்தக மூட்டை சுமப்பேன்?
ஆனா, ஆவன்னா கற்கும் முன்பே -ஏனம்மா
பஞ்சு கற்றோடோ பழக வைத்தாய்?
தீப்பெட்டி தொழிற்சாலை கூலியோடு
இருதய நோயும் இலவசமாம்!
இதற்காகவா அம்மா என்னை எட்டு
மாதத்திலேயே- ஈன்றுஎடுத்தாய்.....?